Friday, December 13, 2013
இலங்கை::எல்ரீரீஈ பற்றியும் புலம்பெயர்ந்தோர் தொடர்பிலும் குரல் எழுப்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடமாகாண மீனவர்கள் தொடர்பில் மௌனித்து இருப்பது ஏன் என பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு கடலை ஆக்கிரமித்து மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் இந்திய மீனவர்கள் தொடர்பிலும் அவர்களது செயலை கண்டிக்காத ஜெயலலிதா தொடர்பாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாய்திறக்காதது ஏன் என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடபகுதி மக்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை சீர்குலைக்கும் செயற்ப்பாட்டில் இந்திய மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் வடபகுதியிலுள்ள கடல்வளங்களை அழிக்கின்றனர்.
தடை செய்யப்பட்ட வலைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இலங்கை மீனவர்களுடைய வாழ்வாதாரத்திற்கே பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல மட்டங்களில் பேச்சுவார்த்தை நடாத்தியும் உரிய பலன் கிடைக்கவில்லை.
வடபகுதி மீனவர்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மீனவர்களது பிரச்சினையை விட அரசியல் இலாபம்
முக்கியமாக காணப்படுகிறது.
இதன்காரணமாகவே இந்திய மீனவர்களுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித கருத்துக்களையும் வெளியிடுவதில்லையென பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:
Post a Comment