Sunday, December 08, 2013
இலங்கை::புலிகளின் மாவீரர் தினம் சம்பந்தப்பட்ட பதாகையினை களுவாஞ்சிக்குடி இராணுவ முகாமுக்கு முன்பாக ஏந்திக் கொண்டு சென்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பட்டியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் பயிலும் மாணவர்கள் இருவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு நாளை 9 ஆம் திகதி களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும் மேற்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இம்மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது. கடந்த வாரம் சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பம் பிறேம்நாத் சமர்ப்பித்த மனுவின் பேரில் இவர்கள் இருவரும் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஆர்.எப்.றியாழினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment