Pages

Tuesday, December 17, 2013

தாய்லாந்தின் சகல தரப்பினருக்கு இடையிலும் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது: இலங்கை!

Tuesday, December 17, 2013
இலங்கை::தாய்லாந்தின் அரசியல் நிலைமைகள் குறித்து இலங்கை அவதானம்.

தாய்லாந்தின் அரசியல் நிலைமைகள் குறித்து இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

தாய்லாந்து பிரதமர் யான்குலுக் சின்வத்ராவை பதவி விலகுமாறு கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சின்வத்ராவின் ஆதிக்கத்தின் அடி;பபடையில் யான்குலுக் ஆட்சி நடத்தி வருவதாக எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

சகல தரப்பினருக்கு இடையிலும் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனநாயகக் கொள்கைகள் கோட்பாடுகளின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment