Thursday, December 19, 2013
இலங்கை::வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வுமையத்தில் சிங்கள மொழி தேர்ச்சி கற்கை நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்ட புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் ஒரு தொகுதி முன்னாள் புலிபோராளிகள் கடந்த வெள்ளிக்கிழமை (13) கற்கை நெறிக்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
சிங்கள மொழி தொடர்பாடல் ஆற்றலை மேம்படுத்தும் பொருட்டு விசேடமாக வடிவமைக்கப்பட்ட இப்பாட நெறியானது வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வுமையத்தில் இடம்பெற்றது. அரச கரும மொழி மற்றும் பயிற்சி நிலைய போதனா ஆசிரியர்களினால் நடாத்தப்பட்ட இவ் இரு வார கற்கை நெறியில்
98 மாணவர்கள் (புலிபோராளிகள்) இணைத்துக் கொள்ளப்பட்டதுடன் இவர்களுள் 22 பயனாளிகள் 90 க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும்.
இதன் போது முன்னாள் புலி போராளி எம். இந்திரகுமார் சிறந்த மாணவருக்கான விருதினைப் பெற்றுக் கொண்டார்.
இதுவரையில் 600 சிறுவர் புலிபோராளிகள் உட்பட ஆயிரக்கணக்கான புலிபோராளிகள் புனர்வாழ்வளிக்கப்ட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments:
Post a Comment