Monday, December 16, 2013

நிலவில் இறங்கியது சீன விண்கலம்!

Monday, December 16, 2013
பீஜிங்::ஆய்வுக்காக சீனா அனுப்பிய விண்கலம், நிலவில் நேற்று தரை இறங்கியது கம்யூனிஸ்ட் நாடான சீனா, சமீபகாலமாக விண்வெளித்துறையில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
 
இதன் ஒரு பகுதியாக, நிலவை ஆய்வு செய்வதற்காக, "சாங்கி-3' என்ற ஆளில்லாத விண்கலத்தை, நிலவுக்கு அனுப்பி வைத்தது.இந்த விண்கலம், நேற்று நிலவில் தரை இறங்கியது.
 
மோதாமல், சேதம் அடையாமல், விமானம் தரை இறங்குவது போல், விண்கலம் நிலவில் தரை இறங்கியது. கடந்த 40 ஆண்டுகளில் இவ்வாறு விண்கலம் நிலவில் இறங்கியது,
 
இதுவே முதல் முறை. அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன் ஆகிய நாடுகளை தொடர்ந்து, நிலவில் விண்கலத்தை தரை இறங்கச்செய்த சாதனையை சீனா படைத்துள்ளது. இந்த விண்கலத்தை, சீன விஞ்ஞானிகள் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment