Pages

Wednesday, December 18, 2013

மதுரை கூடல் நகர்-காதல் மனைவியை ஏமாற்றி விட்டு இலங்கைக்கு தப்ப முயன்றவர் கைது!

Wednesday, December 18, 2013
மதுரை::காதல் திருமணம் செய்த மனைவியை ஏமாற்றி விட்டு, இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றவரை, போலீசார் கைது செய்தனர்.
மதுரை கூடல் நகர், நடராஜ சிவா என்பவரது மகள் வெரோனிகா ரோசரி, 29. பெரியகுளம் டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த வின்சென்ட் ரெனால்ட், 32. கடந்த, 2007ல், கொச்சியில், காதல் திருமணம் செய்து கொண்டனர். வின்சென்ட், வேலைக்காக, அடிக்கடி வெளிநாடு சென்று வருவார். அப்போது ஜெர்மன் நாட்டு பெண்ணுடன், பழக்கம் ஏற்பட்டது. இதனால், வெளிநாட்டில் இருந்தபடியே, விவாகரத்து கேட்டு, மனைவிக்கு,"மொபைல் போனில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
 
வெரோனிகா, மறுத்து விட்டார். தந்தை மரணத்தை யொட்டி, சொந்த ஊருக்கு வந்த வின்சென்ட், தாய் ரோஸ் பெர்ட் ரீட்டா, 53, சகோதரர் ஈஸ்டன் ராஜ் ஆகியோருடன், வெரோனிகாவை அறைக்குள் அடைத்து மிரட்டி, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். அங்கிருந்து தப்பிய வெரோனிகா, தேனி மகளிர் போலீசில் புகார் செய்தார். கணவர், தன்னை ஏமாற்றி விட்டு, இலங்கைக்கு தப்பி செல்ல இருப்பதாக கூறினார். போலீசார், வின்சென்ட் ரெனால்டை கைது செய்தனர்.

No comments:

Post a Comment