Pages

Wednesday, December 11, 2013

எந்தக் காலத்திலும் லஞ்சம் பெற்றுக்கொண்டதில்லை: பிரதமர் டி.எம். ஜயரட்ன!

Wednesday, December 11, 2013
இலங்கை::எந்தக் காலத்திலும்  லஞ்சம் பெற்றுக்கொண்டதில்லை என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளின் மூலம் ஒருபோதும் பணம் சம்பாதிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாதாரண பொதுமக்களுக்காக தாம் சிறையில் தண்டனை அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல்மோசடியில் ஈடுபட்டதாக எவரும் தம்மீது குற்றம் சுமத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மூன்று தடவைகள் தாம் பிரதமர் பதவியை தியாகம் செய்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment