Sunday, December 15, 2013

ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து 8 ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன: இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய!

Sunday, December 15, 2013
இலங்கை::ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து 8 ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து பாரியளவில் ராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் நடைபெறவுள்ளது. மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து பாதுகாப்பு அமைச்சினால் எட்டு ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணப்படங்கள் வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுக்கு இந்த ஆவணப்படங்கள் காண்பிக்கப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் இலங்கை அரச படையினர் எவ்வாறான மனிதாபிமான தொண்டுகளை ஆற்றினார்கள் என்பது பற்றி தெளிவுபடுத்தும் நோக்கில் ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் நோக்கில் இந்த ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யுத்தத்தின் பி;ன்னரான அபிவிருத்திகள் குறித்து அடிக்கடி இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் புதிய ஆவணப்படங்கள் வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் பின்னர் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க சில நாடுகள் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த முயற்சிகளை முறியடிக்கும் நோக்கில் ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பாரியளவில் ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment