Pages

Wednesday, December 11, 2013

64 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் மாணிக்க கல் கடத்த முற்பட்ட நபர் ஒருவர் விமான கைது!

Wednesday, December 11, 2013
இலங்கை::64 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் மாணிக்க கல் கடத்த முற்பட்ட நபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க ஊடகப்பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

சந்தேகநபரிடமிருந்து 47 மில்லியனுக்கும் அதிகமான மாணிக்க கல் மற்றும் 17 மில்லியனுக்கும் அதிகமான தங்க கட்டிகள் 8 கைப்பற்றப்பட்டுள்ளன.
புத்தளம்–ஆராய்ச்சிகட்டு பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்த குற்றசாட்டில் இருவர் கைது!
 
புத்தளம்–ஆராய்ச்சிகட்டு பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்த குற்றசாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சுமார் 3 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த இருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
 
சந்தேகநபர்கள் துவிச்சக்கரவண்டியில் போதைப்பொருளை கொண்டு சென்ற சந்தர்ப்பத்தில் கைது செ
ய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களும், போதைப்பொருளும், முந்தல் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
 
வவுனியாவில் 14வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த  நபர் கைது!
 
வவுனியா, கலாபோகஸ்வெவ பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 22 வயதுடைய ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
 
14 வயதுடைய சிறுமியை பிரப்பமடு பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
 
இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கலாபோகஸ்வௌ பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார் அந்த நபரை கைது செய்து வவுனியா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
 
பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்தார்.

No comments:

Post a Comment