Thursday, December 05, 2013
சென்னை::தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தும் பிரச்னையில் உண்மை நிலையை கண்டறிய 6 பேர் கொண்ட குழு விரைவில் நியமிக்கப்படும்' என்று மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.
மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் நேற்று மாலை 6 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இலங்கை ராணுவத்தால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இரு நாட்டு மீனவர் சங்க தலைவர்களை அழைத்து இம்மாத இறுதிக்குள் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.
மீனவர் பிரச்னையில் உண்மை நிலையை கண்டறிய ஒரு குழுவை அமைப் பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 6 பேர் அடங்கிய குழுவில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி, ஐஏஎஸ் அதிகாரி, சிபிஐ அதிகாரி, வெளியுறவு துறை உயர் அதிகாரி மற்றும் இலங்கையை சேர்ந்த 2 உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் இரு நாட்டு மீனவர்களிடையே ஏற்படும் பிரச்னை பற்றி விரிவாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்திய-இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இருந்து தினமும் 4000க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்கின்றன. அதில் ஒரு சில படகுகளில்தான் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகின்றது. அது ஏன் என்று ஆலோசிக்க வேண்டும்.
தமிழகத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படும் மின்சாரம் சிறிதளவு கூட குறைக்கப்படுவதில்லை. வழக்கம்போல் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசை பொறுத்த வரையில் புதிய மின் திட்டங்களை பல ஆயிரம் கோடி செலவில் திட்டமிடப்பட்டு தொடங்கும். அவை செயல்படுவதற்கான மூலப்பொருட்களையும்
தட்டுப்பாடின்றி கொடுத்து வரும்.
அந்த மின் திட்டங்கள் சரியான முறையில் செயல்படுகிறதா என்பதை கண்காணித்து இடையூறு இல்லாமல் செயல்பட வைப் பது மாநில அரசுகளின் பொறுப்பு. அதை சரிவர கண்காணிக்காததால் தான் சில மின் திட்டங்களில் போதிய அளவு மின் உற்பத்தி இல்லாமல் முடங்கும் சூழ்நிலை உள்ளது. எனவே மாநில அரசுகளுக்கும் இதில் பொறுப்பு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment