Pages

Wednesday, December 18, 2013

கம்புருப்பிட்டிய மாசமுல்லையில் கொலைசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு 5 இலட்சம் ஒதுக்கீடு!

Wednesday, December 18, 2013
இலங்கை::மாத்தறை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய லியணாச்சி சுனில் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் அண்மையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்திருந்தார்.
அதற்காக அப்பொலிஸ் உத்தியோகத்தரும்  அவரது மனைவியும் குற்றவாளிகளால் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.  
லியனாரச்சி சுனில் எனும்  பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டுக்குச்சென்று  இரவு வேலையிலேயே இப்பொலிசாரையும் அவரது மனைவியும் குற்றவாளிகள்; கொலை செய்திருந்தனர்.  அத்துடன் அவரது இரண்டு பிள்ளைகளையும் கடுமையாக தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்குழந்தைகளுக்காக வீடொன்றை பெற்றுத்தாருமாறு பொலிஸ் திணைக்களம் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
(15)ஆம் திகதி அமைச்சர் விமல் வீரவன்சவின் அலுவலகத்தில் பொலிசாரின் தாய் மற்றும் அவரின் இரு பிள்ளைகள் அமைச்சரை சந்தித்து மறைந்த பொலிசார் நிர்மாணித்திருந்த  வீட்டை முற்றாக நிர்மாணித்துத் தரும்படி வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
கம்புருப்பிட்டிய மாசமுல்லையில் உள்ள பொலிசாரின் வீட்டினை முற்றாக நிர்மாணிப்பதற்கு அமைச்சர் விமல் வீரவன்வன்ச ரூபா 5 இலட்சத்தினை ஒதுக்கீடு செய்து இதற்கான காசோலையும் மறைந்த பொலிசின் பெற்றோரிடம்  கையளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment