Pages

Wednesday, December 18, 2013

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் ராணுவ புரட்சி முறியடிப்பு: 500 பேர் பலி!

Wednesday, December 18, 2013
ஜுயா::ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் தலைநகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது. முன்னாள் துணை அதிபர் ரியக் மானசரின் ஆதரவு ராணுவ வீரர்கள் இதில் ஈடுபட்டனர்.

அதிபர் சால்வா கீருக்கு எதிராக நடந்த இந்த புரட்சி 2 நாட்களில் முறியடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ராணுவ புரட்சியின் போது 400 முதல் 500 பேர் வரை பலியாகி இருப்பதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

புரட்சியில் ஈடுபட்டதாக முன்னாள் நிதி மந்திரி கோஸ்டி மானிப், முன்னாள் நீதித்துறை மந்திரி ஜான் லக் ஜோக், முன்னாள் உள்துறை மந்திரி ஜியர் சங் அலங் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைநகர் ஜுயாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராணுவ புரட்சியின் போது சுமார் 20 ஆயிரம் பேர் ஜுபாவில் உள்ள ஐ.நா.வளாகத்தில் தஞ்சம் அடைந்தனர்..
 

No comments:

Post a Comment