Pages

Thursday, December 12, 2013

மட்டக்களப்பு மாவட்டத்தில் 50 வீடுகளுக்கான அடிக்கல் நடும் வைபவம்!

Thursday, December 12, 2013
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேறிய கிராமங்களான  ஒள்ளிக்குளம் ,மண்முனை,ஏறாவூர் மஜீட் ஆகிய மூன்று கிராமங்களில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும், விஷேட சட்ட ஆலோசகரும்,பிரபல தனவந்தருமான  சட்டத்தரணி  யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் உள்ளிட்ட சவூதி அரேபிய குழுவினரின் நிதியுதவியுடன் வீட்டு திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு  (11-12-2013) செவ்வாய்க்கிழமை மூன்று கிராமங்களில் வௌ;வேறு நிகழ்வாக இடம்பெற்றது.
 
இதன் போது பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும், விஷேட சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி  யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரினால் திட்ட நினைவுக்கல் திரை நீக்கம் செய்யப்பபட்டதுடன் வீட்டு திட்டத்திற்தகான அடிக்கல்லும் நடப்பட்டது.
 
இதில் ஒள்ளிக்குளம் ,மண்முனை அடிக்கல் நடும் நிகழ்வில் சவூதி அரேபிய மதீனமா நகரத்தைச் சேர்ந்த முஹம்மத் காலித் அல் கையூம் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி -அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் மும்தாஸ் (மதனி), பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின்,ஆரையம்பதி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முபாறக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதோடு ஏறாவூர் மஜீட் கிராமத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சவூதி அரேபிய மதீனமா நகரத்தைச் சேர்ந்த முஹம்மத் காலித் அல் கையூம், அஷ்ஷேய்க் மும்தாஸ் (மதனி) ,ஏறாவூர் ஸைனப் மஸ்ஜித் பள்ளிவாயல் நிர்வாகிகள் ,அப்துல் மஜீத் ஹாஜியார் உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் சவூதி அரேபிய பிரமுகர்களினால் ஏறாவூர் ஸைனப் பள்ளிவாயலில் பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது.
 
சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும், விஷேட சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி  யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித்தின் மரணித்த தாய் தந்தையர்களின் நினைவாக இவ் வீட்டு திட்டம் அமைக்கப்படவுள்ளதோடு முதற்கட்டமாக வறிய குடும்பங்கள் இனம்கானப்பட்டு அவர்களின் வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் மற்றைய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
 
ஒல்லிக்குளம்:
 
கடந்த யுத்தம் காரணமாக தங்களது அடிப்படை வசதிகளை முழுமையாக விட்டு வெளியேரிய ஒல்லிக்குளம் பகுதி மக்களுக்கு இலங்கை அரசின் ஆதரவுடன் இலங்கை சவுதி நற்புறவுக்கான திட்டத்தின் கீழ்  அமைக்கப்படவுள்ள 50 வீடுகளுக்கான அடிக்கல் நடும் வைபவம் நேற்று இடம் பெற்றது.
 
ஒல்லிக்குளம் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவர் எம்.எம் பதுர்தீன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பொருளாதர அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லாஹ் சவுதி நாட்டின் பிரதிநிதி எஹ்யா பின் அஸீஸ் கி.ச.உறுப்பினர் எம்.எப்.எம் சிப்லி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும்கலந்து கொண்டனர்.இவ் வீடமைப்பு மூலம் எவ்வித வசதிகளும் அற்ற பல வறிய குடும்பங்களுக்கு பயண்கிட்டயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment