Pages

Tuesday, December 17, 2013

30 வருடகால எல்ரீரீஈ யுத்தத்தில் இராணுவத்தினர் எவ்வித யுத்த குற்றச்சாட்டையும் புரியவில்லை: அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க!

Tuesday, December 17, 2013
இலங்கை::30 வருடகால எல்ரீரீஈ பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் இராணுவ நடவடிக்கையின்போது ஆயுத படையினர் எவ்வித யுத்த குற்றச்சாட்டையும் புரியவில்லையென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
 
இலங்கைக்கு வருகைதந்திருந்த ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசியுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.
 
2011 ம் ஆண்டின் தமிழ் அரச ஊழியர்களை வைத்து, வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் , வடமாகாணத்தில் 7 ஆயிரத்து 974 பேர் இயற்கைக்கு மாறான முறையில் உயிரிழந்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யுத்தத்தின் இறுதி கட்டத்தில் 40 ஆயிரம் முதல், ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் மரணித்தார்கள் என்ற அறிக்கைகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கை;கெதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள், இலங்கையில் இன்று உருவெடுத்துள்ள இனவாதம், நல்லிணக்கப்பாட்டுக்கு தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
2011ம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீட்டு அறிக்கையின்படி , 2009ம் ஆண்டு சுமார் 5 ஆயிரம் எல்ரீரீஈ பயங்கரவாதிகள் மரணித்தார்கள். அவர்கள் அனைவருமே தற்கொலை புரிந்துகொண்;டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 
மேலும் 3 ஆயிரம் பேர் வேறு காரணங்களுக்காகவும் மரணித்திருப்பதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
 
இறுதி கட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின்போது எல்ரீரீஈயினால் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மனித கேடயங்களாக வைக்கப்பட்டிருந்தனர். இதன்போது எல்ரீரீஈ பயங்கரவாதிகளிடமிருந்து தப்பிச்செல்ல எத்தனித்த மக்களை, எல்ரீரீஈ பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை எல்ரீரீஈ பயங்கரவாதிகள், வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் சிங்களவர்களை விரட்டி அடித்துள்ளார்கள். எனினும் இவ்வாறான அனர்த்தங்கள் வடக்கில் இடம்பெற்ற போது, கொழும்பில் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் தமிழர்கள் நிம்மதியாக வாழ்ந்து வருவதாகவும், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க , யசூசி அகாசியிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார்!

No comments:

Post a Comment