Wednesday, December 18, 2013
இலங்கை::கொழும்பு மாநகர சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 42 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி வரவு
செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்ததாக கொழும்பு மாநகர சபை மேயர் ஏ.ஜே.எம். முஸ்ஸம்மில் தெரிவித்தார்.
எதிர்க் கட்சியும் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு நேற்றிரவு நடத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களில் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுவருகின்றமை குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
குறித்த பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் நகர சபைகளின் தலைவர்களுக்கு இது தொடர்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல்ல தெரிவித்தார்.

No comments:
Post a Comment