Thursday, December 19, 2013

11.12.13 மாலை 14:15க்கு பிறந்த குழந்தைக்கு சிறப்பு!!

Thursday, December 19, 2013
லண்டன்::அபூர்வ தேதியான 11.12.13ம் தேதி, பிரிட்டனில் பிறந்த குழந்தை, சிறப்பானதாக கருதப்படுகிறது. நூற்றாண்டுக்கு ஒரு முறை தான் 11.12.13 எண் கொண்ட தேதி வருகிறது.
 
மீண்டும் இது போன்ற தேதி, 11.12.2113ம் ஆண்டு தான் வரும். இது போல் தொடர்ச்சியான எண் கொண்ட தேதி, 01.02.2103ம் ஆண்டு வருகிறது.
 
இது போன்று தொடர்ச்சியான எண்கள் கொண்ட நாட்கள் விசேஷமான தினமாக கருதப்படுகிறது. இந்த அபூர்வ நாட்களில், பலர், திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியங்களை நடத்தியுள்ளனர்;
 
கர்ப்பிணிகள் பலர் அன்றைய தினம், சிசேரியன் சிகிச்சை மூலம் பிரசவித்துள்ளனர். பிரிட்டனில், தெற்கு யார்க் ஷயரைச் சேர்ந்த, லாண்டன் ஜோகன் ஜான்சன் தம்பதிக்கு, 11ம் தேதி, குழந்தை பிறந்தது. அன்றைய தினம், மாலை 2:15க்கு இந்த பிறந்ததால், 11/12/13/14:15 என்ற எண்களில் அதன் பிறப்பு தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்படுகிறது. இதனால், இக்குழந்தை மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

 
 

No comments:

Post a Comment