Pages

Friday, December 13, 2013

முல்லைத்தீவு கடல் எல்லைக்குள் வைத்து கைதான 111 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

Friday, December 13, 2013
இலங்கை::முல்லைத்தீவு கடல் எல்லைக்குள் வைத்து கைதான 111 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களை நேற்று  மாலை திருகோணமலை பதில் நீதவான் தி.திருச்செந்தில்நாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட மீனவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின் பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்..
 
அவர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
யாழ். அனலைதீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 30பேருக்கும் 17 வரை விளக்கமறியல்!
 
யாழ். அனலைதீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் என்.தம்பிமுத்தன்  நேற்று உத்தரவிட்டார்.

இந்திய புதுக்கோட்டை ஜனதாப்பட்டிணம் மற்றும் கோட்டைப்பட்டிணம் பகுதிகளிலிருந்து 8 படகுகளில் 30 மீனவர்கள் யாழ். அனலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட வேளையில், காங்கேசன்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 30 மீனவர்களும் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரி மேற்படி 30 மீனவர்களையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த மீனவர்களின் 8 படகுகளையும் காங்கேசன்துறை கடற்படையினரின் பாதுகாப்பில் வைத்துக்கொள்ளுமாறும், மீனவர்களினால் பிடிக்கப்பட்ட மீன்களை அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்..
 
 
யாழ்ப்பாணம், தொண்டைமானாறு கடற்பரப்பில் நிர்க்கதிக்குள்ளான இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!
 
யாழ்ப்பாணம், தொண்டைமானாறு கடற்பரப்பில் நிர்க்கதிக்குள்ளான இந்திய மீனவர்கள் மூவர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
 
கடற்படையினரால் இந்த மீனவர்கள் கரைக்கு அழைத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
 
சீரற்ற வானிலையுடன், இந்த மீனவர்களின் படகில் எரிபொருள் தீர்ந்துபோன நிலையில் அவர்கள் கடலில் நிர்க்கதிக்குள்ளாகி இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன குறிப்பிடுகின்றார்.

No comments:

Post a Comment