Thursday, December 12, 2013
இலங்கை::வடபகுதி கடலில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதான 110 இந்திய மீனவர்களிடமும் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவுசெய்து வருகின்றனர்.
முல்லைத்தீவிற்கு வடக்கே செம்மலை கடற் பரப்பில் வைத்து 110 இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்று கைதுசெய்ததுடன், அவர்களின் 15 படகுகளையும் பறிமுதல் செய்திருந்தனர்.
அதன் பின்னர் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய மீனவர்கள் கடற்படையினரால் துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரிடமும் திருகோணமலை துறைமுக பொலிஸார் வாக்குமூலங்களை பதிவுசெய்து வருகின்றனர்.
வாக்கமூலங்களை பதிவுசெய்த பின்னர் இன்று மாலைக்குள் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment