Tuesday, December 10, 2013

இந்தோனேசியாவில் பயங்கரம் ஆயில் டிரக் மீது ரயில் மோதி பெண்கள் உள்பட 10 பேர் பலி!

Tuesday 10 December 2013
ஜகார்தா::ஆயில் ஏற்றி சென்ற டிரக் வண்டி தண்டவாளத்தை கடந்த போது பயணிகள் ரயில் மோதியது. இதில் 2 ரயில் பெட்டிகள் தீப்பிடித்ததில் இன்ஜின் டிரைவர், பெண் பயணிகள் உள்பட 10 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
 
 இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா தென் மேற்கு பகுதி பின்டாரோ மாவட்டத்தின் புறநகர் பகுதியில் ஆள் இல்லா லெவல் கிராசிங்கில் ஆயில் ஏற்றி சென்ற டிரக் ஒன்று நேற்று தண்டவாளத்தை கடந்தது. அப்போது வேகமாக வந்த பயணிகள் ரயில், டிரக் மீது மோதியது. இதில் டிரக், பயணிகள் ரயிலின் முன்பகுதியில் உள்ள 2 பெட்டிகள் தீப்பிடித்தன. ரயிலில் 600க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதில் முதல் பெட்டி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ரயில் விபத்துக்குள்ளானதை அறிந்ததும் ஏராளமான பயணிகள் ரயிலில் இருந்து குதித்து தப்பினர்.
 
இதில் ரயில் இன்ஜின் டிரைவர், அவரது உதவியாளர், பெண்கள் உள்பட 10 பேர் தீயில் கருகி இறந்தனர். விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்து குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.

No comments:

Post a Comment