Pages

Sunday, November 10, 2013

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காததால் இலங்கையுடனான உறவு பாதிக்காது: சல்மான்குர்ஷித்!

Sunday, November 10, 2013
புதுதில்லி::இலங்கையில் இன்று நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளமாட்டார் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
இருப்பினும் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை  அமைச்சர் சல்மான்குர்ஷித் கலந்துகொள்வார் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
இதையடுத்து தில்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித், 'பிரதமர் இம் மாநாட்டில் கலந்து கொள்ளாததால் இலங்கையுடனான உறவு பாதிக்காது,' என்று தெரிவித்தார்..

தேசியநலன் கருதி இது போன்ற கூட்டங்களில் ஏற்கனவே பிரதமர் பங்கேற்காமல் இருந்துள்ளார். தற்போது காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காததால் இருநாட்டு உறவும் பாதிக்காது. எதிர் காலத்தில் பேச்சுவார்த்தை நடைபெறாது என்று நினைக்க கூடாது.
இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
 
 
 

No comments:

Post a Comment