Monday, November 11, 2013
நாகை::டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை நாளை தமிழக மீனவர்கள் சந்திக்கின்றனர். அப்போது, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளனர்.
நாகை, தஞ்சை, புதுகை, ராமநாதபுரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினர் மற்றும் அந்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்களின் படகுகள், நவீன கருவிகள், மீன்களையும் பறித்து செல்கின்றனர். இதை கண்டித்து மீனவர்கள் தொடர்ந்து போராட்டங்கள், உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் தொடர்கிறது.இதையடுத்து தமிழகம், புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பில் உள்ள நாகை, தஞ்சை, புதுகை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள், பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்தனர். அதன்படி 6 மாவட்டங்களை சேர்ந்த 9 மீனவர் சங்க பிரதிநிதிகள், இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டனர்.
தேசிய மீனவர் பேரவை செயலாளர் புதுச்சேரி இளங்கோவன் தலைமையில், காரைக்கால் வீரதாஸ், வேல்மயில், சின்னத்தம்பி, முருகபாண்டி, நாகை அக்கரைப்பேட்டை மோகன்தாஸ், வீரமுத்து, புதுகை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்க முன்னாள் தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட 9 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.டெல்லி செல்லும் இவர்கள் முதலில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து பேசுகின்றனர். பின்னர் நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜ மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரையும் சந்தித்து தங்கள் குறைகளை கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:
Post a Comment