Monday, November 11, 2013

புலிகூட்டமைப்புகுள் முறன்பாடு: உண்ணாவிரதம் நடந்தால் தலையற்ற முண்டமே வீட்டிற்குவரும் (புலி)கூட்டமைப்பின் சுகிர்தனுக்கு கொலை அச்சுறுத்தல்; வீட்டு வாசலில் மாட்டின் மண்டையோடும் வைப்பு!

Monday, November 11, 2013
இலங்கை::புலிகூட்டமைப்புகுள் முறன்பாடு: உண்ணாவிரதம் நடந்தால் தலையற்ற முண்டமே வீட்டிற்குவரும் (புலி)கூட்டமைப்பின் சுகிர்தனுக்கு கொலை அச்சுறுத்தல்; வீட்டு வாசலில் மாட்டின் மண்டையோடும் வைப்பு!

இன்று அதிகாலை  மாட்டுத்தலைகள் அன்பளிப்பாக அனுப்பப்பட்டுள்ளது. வலி.வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ச.சஜீவன் ஆகிய இருவரதும் தொலைபேசிக்கு அழைப்பினை எடுத்து மிரட்டல்களை விடுத்த நபர்கள் அவர்களது வீடுகளிற்கு முன்னாலும் இன்று காலை மாட்டின் தலையினையும் வைத்துவிட்டு சென்றுமுள்ளனர்.

சம்பவம் குறித்து தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவிக்கையில்;, நேற்று இரவு தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்ட நபர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்த கூடாது என்றும் அவ்வாறு நடத்தப்பட்டால் தலையற்ற முண்டமே வீட்டுக்கு வரும் என்றும் மிரட்டினர். மேலும் அதே விடயத்தை குறுந்தகவல் மூலமும் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து காலை சுன்னாகத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முன்னால் எரிந்த மாட்டின்  தலையினை கொண்டுவந்து வைத்து விட்டு  சென்றுள்ளனர்.

அதே வேளை வலி.வடக்கு பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ச.சஜீவனும் இனந்தெரியாதவர்களினால் மிரட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் வலி. வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தனுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கையடக்கத் தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் அவருடைய ஏழாலை வீட்டிற்கு முன்பாக மாட்டின் தலையும் வைக்கப்பட்டுள்ளது என்று சுன்னாகம், மற்றும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பருத்தித்துறைப் பகுதியில் வசிக்கும் வலி. வடக்கைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களுடன் சோ.சுகிர்தன் மீள்குடியேற்றம் சம்பந்தமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேற்படி அநாமதேய தொலைபேசி அழைப்பு மூலம் கொலை அச்சுறுத்தலும் வீட்டு வாசலில் மாட்டின் மண்டை ஒடும் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சோ. சுகிர்தனால் சுன்னாகம், தெல்லிப்பளை பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் செய்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு யாழ். மாவட்ட தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபைத் தலைவர் தியாகராஜா பிரகாஷ் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment