Tuesday, November 12, 2013

இந்தியா இலங்கையின் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்காமையானது பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையுடன் அதிக நட்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு வழிவகுக்கலாம்: த இக்கோனோமிக்ஸ் டைம்ஸ்!

Tuesday, November 12, 2013
இலங்கை::இந்தியா இலங்கையின் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்காமையானது பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையுடன் அதிக நட்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு வழிவகுக்கலாம் என்று  தஇக்கோனோமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீனாவும் பாகிஸ்தானும் ஏற்கனவே இலங்கையுடன் அதிக நட்பை கொண்ட நாடுகளாக உள்ளன.இது இந்தியாவின் நலநன பாதிக்கும் விடயமாகவே இருந்து வருகிறது.

இந்தநிலையில் கொழும்பு மாநாட்டை உள்நாட்டு பிரச்சினை காரணமாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணித்துள்ளார்.

இதன்காரணமாக ஏனைய நாடுகள் இலங்கையுடன் நட்பை அதிகரித்துக்கொள்ள தற்போதே முயற்சிக்கின்றன என்று இலங்கையின் ராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

No comments:

Post a Comment