Pages

Sunday, November 10, 2013

இலங்கை சுங்கப் பிரிவினரால் அண்மையில் பெருந்தொகை ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் சர்வதேச பொலிஸாரால் கைது!

Sunday, November 10, 2013
இலங்கை::சுங்கப் பிரிவினரால் அண்மையில் பெருந்தொகை ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் சர்வதேச பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த சந்தேகநபர் காஷ்மீர் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
 
சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
தெற்காசிய வலயத்திலேயே பாரியளவிலான ஹெரோய்ன் போதைப்பொருள் தொகை கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கையில் கைப்பற்றப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
 
இதுதொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பிரதான சந்தேகநபர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பது இதன்மூலம் தெரியவந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து நீதிமன்றத்தினால் பிடிவிராந்து பெற்று, சந்தேகநபரை கைதுசெய்வதற்காக போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் சர்வதேச பொலிஸாருடன் இணைந்து சிவப்பு அறிவித்தலை விடுத்திருந்தனர்.
பெருந்தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னடுப்பதற்காக சந்தேகநபரை இலங்கைக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகள்
 
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment