Pages

Sunday, November 3, 2013

யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் முயற்சிகளிலோ அல்லது, வீடுகளை அழிக்கும் செயற்பாடுகளிலோ ஈடுபடவில்லை: இராணுவப் பேச்சாளர் ருவான் வர்ணகுளசூரிய!

Sunday, November 03, 2013
இலங்கை::யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் முயற்சிகளிலோ அல்லது, வீடுகளை அழிக்கும் செயற்பாடுகளிலோ தாங்கள் ஈடுபடவில்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வர்ணகுளசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கில் உள்ள பொது மக்களின் குடியிறுப்புகளை அழிக்கும் பணிகளை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்ட பின்னரும், அங்கு குடியிறுப்புகள் அழிக்கப்பட்டுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தி இருந்தது.

இது சம்பந்தமாக எமது செய்திப்பிரிவு இராணுவப் பேச்சாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இராணுவத்தினர் சிங்கள குடியேற்றத்தை மேற்கொள்வதற்கான வீடமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும், தமிழ் மக்களின் குடியிறுப்புகளை அழித்து வருவதாகவும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு வந்தன.

எனினும் இராணுவத்தினர் அவ்வாறான செயற்பாடுகள் எவற்றிலும் ஈடுபடவில்லை.

இராணுவ முகாமின் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலேயே நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்ற என்றும், இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment