Thursday, November 07, 2013
சென்னை::போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாழ்ந்து வரும் சென்னை மக்களுக்கு
மெட்ரோ ரயில் திட்டம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். லோக்கல் ரயில்களில் நெரிசலில்
பயணித்து அலுத்து போன இந்த மக்களுக்கு மெட்ரோ ரயில் சேவை விரைவில் துவங்க வேண்டும்
என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
தற்போது, கோயம்பேட்டில் இருந்து ஆசர்கானா வரையிலான மெட்ரோ ரயில் பாதைகளில்,
பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
நேற்று நடந்தது. இதற்காக, கோயம்பேட்டில் உள்ள ஷெட்டில் இருந்து 800 மீட்டர்
தொலைவிற்கு அனத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த சோதனை ஓட்டத்தை முதல்வர்
ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ. 14 ஆயிரத்து 600 கோடி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. நவீன வசதிகள் கொண்ட மெட்ரோ ரெயில் முழுவதும் ஏ.சி. வசதி
செய்யப்பட்ட ரெயில் பெட்டிகள், ஆட்டோ கதவுகள், குஷன் இருக்கைகள் என சொகுசான பயணத்தை
தரப்போகிறது.
வண்ணாரப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் , சென்டிரலில் இருந்து
கோயம்பேடு வழியாக பரங்கிமலை , வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்டிரல் வழியாக
சைதாப்பேட்டை வரை சுரங்கப்பாதையிலும், சைதாப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் வரை
மேம்பாலத்திலும் ரெயில்கள் ஓடும். இதற்கென பாதைகள் அமைக்கும் பணி துரிதமாக நடந்து
வருகிறது.
இதே போல் மற்றொரு வழித்தடத்தில் சென்டிரலில் இருந்து திருமங்கலம் வரை
சுரங்கப்பாதையிலும், திருமங்கலத்தில் இருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரை
மேம்பாலத்திலும் ரயில்கள் இயக்கப்படும். முதற்கட்டமாக, கோயம்பேடு-ஆசர்கானா
(பரங்கிமலை) இடையே அடுத்த 2015ம் ஆண்டு மத்தியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து முழு
அளவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான், சீனாவில் நடைமுறையில் இருக்கும் இந்த ரயில்கள் போல சென்னையிலும்
அதிவேகத்துடன் மெட்ரோ ரயில்கள் இயங்கும். இதற்கான சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெ.,
இன்று மதியம் துவக்கி வைத்தார்.
நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேர்:
இது குறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர்
கூறுகையில்: சென்னை பீச் - தாம்பரம் இடையே, தினமும், 230 ரயில் சர்வீஸ்களில், 2.5
லட்சம் பேரும், சென்னை பீச் - வேளச்சேரி இடையே, 134 சர்வீஸ்களில், ஒரு லட்சம்
பேரும் பயணிக்கின்றனர். பயணிகள் கூட்டம் அதிகமுள்ள, காலை மற்றும் மாலை வேளைகளில், 5
நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 15லிருந்து 20 நிமிட இடைவெளியில், ரயில்கள்
இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் திட்ட பணிகள் முடிந்ததும், முதல் கட்டமாக, நான்கு
பெட்டிகளுடன் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றரை நிமிடங்களுக்கு ஒரு ரயில்
இயக்கினால், ஒரு மணிநேரத்திற்கு, 24 ஆயிரத்து 324 பேர் பயணம் செய்யலாம். பயணிகள்
பயன்படுத்த லிப்ட், எஸ்கலேட்டர் வசதிகள், அகலமான மாடிப் படிக்கட்டுகள் மற்றும்
பிரமாண்டமான அளவில் வாகன நிறுத்த வசதியுடன் பரங்கிமலை நிலையம் அமைய உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
.jpg)

No comments:
Post a Comment