Pages

Sunday, November 3, 2013

கிழக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சி நடைபெறவில்லை: பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா!

Sunday, November 03, 2013
இலங்கை::கிழக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சி நடைபெறவில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சர்
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன்; “கிழக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது. காணி, பூமி, மேய்ச்சல், விவசாயம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் ராணுவத் தலையீடு உள்ளது” என்று குற்றம் சாட்டினார்.
 
இதன்போது குறுக்கிட்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா “உங்களின் இந்த கூற்றை மறுக்கின்றேன்- இங்கு இராணுவ ஆட்சி நடைபெறவில்லை. நீங்கள் அரசியல் செய்வதற்காக இவற்றை கூறுகின்றீர்கள். உங்கள் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.
 
இங்கு சிவில் நிருவாக ஆட்சியே நடைபெறுகின்றது. இராணுவ ஆட்சி நடைபெறுகின்றது என்ற கூற்றை முற்றாக நான் மறுக்கின்றேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
இதன்போது பிரதியைமச்சர் ஹிஸ்புல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் ஆகியோருக்கு இடையில் பலத்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment