Pages

Tuesday, November 12, 2013

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கொண்டு வந்தால் சட்டமன்ற தீர்மானத்தை தி.மு.க. ஆதரிக்கும்: (கரடி புலி) கருணாநிதி பேட்டி!

Tuesday, November 12, 2013
சென்னை::தமிழக சட்டசபையின் அவசர கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
 
இதையொட்டி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் தி.மு.க. தலைவர் (கரடி புலி) கருணாநிதி தலைமையில் அறிவாலயத்தில் இன்று நடந்தது.
 
காலை 11.10 மணிக்கு தொடங்கிய கூட்டம் 12.05 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஏ.வ.வேலு உள்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.
 
இன்று மாலை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு பற்றி கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் கருணாநிதி அளித்த பேட்டி வருமாறு:–
 
கேள்வி:– எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது?
 
பதில்:– தமிழக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும், குறிப்பாக இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்படுவதாகவும் தெரிகிறது.
 
 
இதில் தி.மு.க.வின் நிலைப்பாடு பற்றியும், உறுப்பினர்கள் எந்தவிதமான கருத்துக்களை எடுத்து வைக்க வேண்டும் என்பது பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது.
 
கே:– சட்டமன்றத்தில் மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பீர்களா?
 
ப:– இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இந்த அரசு ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் கருத்து வேறுபாடு இல்லாமல் நிறைவேற்றி தமிழக மக்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்ட வேண்டும். அதன் அடிப்படையில் தி.மு.க.வும் ஆதரிக்கும்.
 
கே:– ஒருவேளை மத்திய அரசை கடுமையாக விமர்சித்தாலும் ஆதரிப்பீர்களா?
 
ப:– வேண்டும் என்றே கடுமையாக விமர்சிக்க முடியாது. இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளும், அவர்கள் அனுபவித்த வேதனைகளையும் களைய மத்திய அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்பதையும் கேட்கவில்லை. எனவே எங்கள் அதிருப்தி முழுமையாக தெரிவிக்கும் வகையில் ஆதரிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment