Pages

Wednesday, November 6, 2013

காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கிறதா, இல்லையா என்பது குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்: பாரதீய ஜனதா அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதரராவ்!

Wednesday, November 06, 2013
சென்னை:காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கிறதா, இல்லையா என்பது குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கூறியுள்ளார். சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:_
 
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை புறந்தள்ளி விட்டு எந்த நிலைபாட்டையும் பாரதீய ஜனதா எடுக்காது. எங்களை பொறுத்தவரை காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வதற்கு முன் மாநாட்டின் செயல் திட்டங்கள் என்ன? அதில் இந்தியா என்ன பேசப்போகிறது என்பதை பற்றி அவர் தெளிவுபடுத்த வேண்டும். அதன் பிறகுதான் ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பது குறித்து எங்களது நிலைபாட்டை முடிவு செய்வோம்.
 
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி, செயலாளர் வானதிசீனிவாசன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

No comments:

Post a Comment