Thursday, November 07, 2013
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் முன்னிலை சோஷலிசக் கட்சியும் தேசிய சுதந்திர முன்னணியும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது கருத்து தெரிவித்தது.
அரசியல் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்த கருத்து: -
இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும் வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் அரசாங்கத்திடமே தங்கியுள்ளது. இல்லையென்றால் அவர்களின் பணத்தை பாதுகாக்க முடியாது. அது பாதகாக்கப்படாது. எனவே அவர்களின் எதிர்ப்புக்கள் வரையறுக்கப்படுகின்றன. அதைப் புரிந்துகொள்ள வேண்டும் இரண்டு கட்சிகளாக பிரிந்து காணப்பட்டாலும் அவர்களின் இருப்பு ஒரே இடத்தில் நிறைவு பெறுகின்றன. அவர்கள் சமாதானமாகுகின்றனர் என்று கூறினாலும் ஒரே தேவைக்காக சமாதானமாகின்றனர். தமது நிறுவனங்களை பாதுகாத்துக்கொள்ள சமாதானமாகினறனர். காட்சட்டை அணிவதிலும் சாரம் அணிவதிலும் மாத்திரமே மாற்றமடைகின்றனர்.
மொஹம்மட் முஸம்மில் தெரிவித்த கருத்து: -
ஏன் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைகின்றது. இந்த தோல்விக்கு என்ன காரணம் அது குறித்து யாரும் கதைப்பதில்லை. 2005 இலும் 2010 இலும் நாட்டு மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை தோல்வியடைச் செய்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தவறான கொள்கையாலும், இன விரோத செயற்பாடுகளாலும், பிரிவினைவாத எல். ரி. ரி. ஈ யுடன் 2001 இல் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டமையாலும் தோல்வியடைந்தது. எட்டு வருடங்களின் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம் ஒன்று இரண்டு வருடங்களில் வீழ்ச்சியடையாது. எனவே ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவதாக இருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸிவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்"

No comments:
Post a Comment