Wednesday, November 13, 2013

ராஜீவ் கொலை கைதிகள் மனு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

Wednesday, November 13, 2013
சென்னை::முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள புலி கைதிகள் தொடர்ந்த வழக்கில் மத்திய உள்துறை செயலாளர் பதில் மனுத்தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில், நாங்கள் கடந்த 20 ஆண்டுகள் ஆயுள் கைதிகளாக வேலூர் மத்திய சிறையில் உள்ளோம். சட்டப்படி 14 வருட சிறையில் இருந்தாலே அவர்களை விடுதலை செய்யவேண்டும். எனவே, எங்களை விடுதலை செய்ய வேண்டும்.

ஆயுள் கைதிகள் விடுதலை குறித்து 3 ஆண்டுக்கு ஒருமுறை ஆலோசனை குழு கூட்டம் நடத்தவேண்டும். ஆனால் கடந்த 3 ஆண்டில் இதுபோல் எந்த கூட்டமும் நடத்தவில்லை. எனவே ஆலோசனை குழு கூட்டத்தை கூட்டி எங்கள் மனுவை பரிசீலனை செய்து எங்களை விடுவிக்க வேண்டும் என்று ராஜீவ்காந்தி கொலை கைதிகள் கோரியுள்ளனர்.

இந்த மனுவை நீதிபதிகள் ராஜேஸ்வரன், பிரகாஷ் ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் மத்திய உள்துறை செயலாளர் 4 வாரத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
 

No comments:

Post a Comment