Pages

Friday, November 8, 2013

பிரபாகரனின் தனிப்பட்ட உதவியாளராக பணி புரிந்த ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது!

Friday, November 08, 2013
இலங்கை::புலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட உதவியாளராக பணி புரிந்த ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
 
தனபாலசிங்கம் லிங்கதாசன் என்ற இந்த நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க, இரண்டு மாத கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
 
இவர் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்து, துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் இராணுவ தந்திரோபாயங்கள் பற்றிய பயிற்சிகளை பெற்றவர் என நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
 
எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்ட அவருக்கு நீதிபதி இந்த தண்டனையை வழங்கினார்.

No comments:

Post a Comment