Pages

Wednesday, November 6, 2013

இங்கிலாந்தில் பரிதாபம் வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் சிறுமி மருத்துவமனையில் சாவு விளையாடிக் கொண்டிருந்த போது விபரீதம்!!

Wednesday, November 06, 2013
லண்டன்::இங்கிலாந்தில் மிகப் பெரிய வளர்ப்பு நாயோடு விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை கடித்து குதறியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.இங்கிலாந்தில் நாட்டிங்காம் அருகே மவுண்ட்சோரல் பகுதியில் உள்ள லெய்ஸ்டர்ஷயர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோடி ஹட்சன் (வயது 30). இவரது மகள் லெக்சி ஹட்சன் (வயது 4). சில வாரங்களுக்கு முன்புதான் கைவிடப்பட்ட மிகப் பெரிய நாய் ஒன்றை கொண்டு வந்து வீட்டில் வளர்த்து வந்தனர். அங்கு அடுக்குமாடி குடியிருப்பில் இவர்களுடைய குடும்பம் வசித்து வந்தது. மிகப் பெரிய சைசிலான அந்த நாய், குட்டிப்பெண்ணான சிறுமி லெக்சி ஹட்சனோடு விளையாடுவதை அண்டை வீட்டாரும் கண்டு ரசித்து வந்தனர்.
 
நேற்று முன்தினம் அதே போல் லெக்சி, நாயோடு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவளது கையில் சாக்லேட்டை வைத்து தின்று கொண்டே விளையாடினாள். இந்நிலையில் அவளது கையில் இருந்த சாக்லேட் பறிக்க நாய் பாய்ந்தது.இந்த விபரீதத்தை அறியாத லெக்சி விளையாட்டாக நாயோடு சண்டையிடவே, ஆத்திரத்தில் பயங்கரமாக குரைத்தபடி லெக்சி மீது பாய்ந்து கடித்து குதறியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்து அலறி கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அங்கு வந்த ஜோடி ஹட்சன், குழந்தையை கடித்த நாயை அடித்தே கொன்றார்.உடனடியாக லெக்சியை மீட்டு நாட்டிங்காமில் உள்ள குயின்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லெக்சி உயிரிழந்தாள். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment