Pages

Friday, November 8, 2013

புதுக்குடியிருப்பில் கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு!

Friday, November 08, 2013
இலங்கை::புதுக்குடியிருப்பில் கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.  70 அடி ஆழமுடைய இந்தக் கிணறை கடந்த 6ம் திகதி புதன்கிழமை நீர் இறைக்கும் போது, பாவனைக்குட்படுத்தப்படாத T-56 ரக துப்பாக்கி ரவைகள் அடங்கியபெட்டி ஒன்றும், 50mm ரக துப்பாக்கி ரவைகளும் பொது மக்களால் கண்டெடுக்கப்படடுள்ளன. இதனையடுத்து  மேற்படி கிணற்றில் மேலும் ஆயுதங்கள் இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டது.

இதன்படி நேற்று வியாழக்கிழமை மாலை; அந்தப் பகுதிக்கு வந்த இராணுவத்தினரும் நீண்ட நேர முயற்சியின் பின உரப்பை ஒன்றினுள் துருப்பிடிக்காத வண்ணம் ஒயில் பூசப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கி ரவைகளை; மீட்டுள்ளனர்.  இந்தநிலையில் குறித்த பகுதியில் மேலும் பல ஆயுதங்கள் இருக்கலாம் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment