Monday, November 4, 2013

கொழும்பு 7 இல் அமைந்துள்ள தேசிய திரைப்பட கூட்டுத்தாபன "தரங்கனி" திரைப்பட அரங்கில் நவம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை பொதுநலவாய நாடுகளின் திரைப்பட விழா!

Monday, November 04, 2013
இலங்கை::கொழும்பு 7 இல் அமைந்துள்ள தேசிய திரைப்பட கூட்டுத்தாபன "தரங்கனி" திரைப்பட அரங்கில் நவம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை மேற்படி திரைப்பட விழா நடைபெறவுள்ளது.
 
பொதுநலவாய நாடுகளிடையே தெரிவுசெய்யப்பட்ட 17 நாடுகளின் திரைப்படங்கள் இந்த விழாவின் போது திரையிடப்படவுள்ளன.
பொதுநலவாய நாடுகளின் சமூக திட்ட உப கமிட்டி தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் இந்த திரைப்பட விழாவை ஒழுங்கு செய்துள்ளது.
 
நவம்பர் 5ஆம்திகதி ஆரம்ப நிகழ்வின் போது 'சேமகே கதாவ' என்ற சிங்களத் திரைப்படம் காண்பிக்கப்படும். இது அழைப்பு விடுத்தவர்கள் மட்டுமே இதனை பார்வையிட முடியும் எனினும் நவம்பர் 6ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை திரையிடப்படும் திரைப்படங்களை சகலரும் முற்றிலும் இலவசமாக கண்டு களிக்கலாம்.
 
இதன்படி இத்திரைப்பட விழாவில் திரையிடப்படும் திரைப்படங்களின் விபரம் வருமாறு:
 
6ஆம் திகதி பிற்பகல் 3.30மணிக்கு - மலேசியத் திரைப்படமான -Return To Murder
மாலை 6.30 மணிக்கு பங்களாதேஷ் திரைப்படமான -Ghetu Putro Komola
7ஆம்திகதி பிற்பகல் 3.30மணிக்கு மாலைத்தீவு திரைப்படமான -Insaaf (Justic)மாலை 6.30 மணிக்கு ஸாம்பியா திரைப்படமான - Destination Zambia
8ஆம்திகதி பிற்பகல் 3.30மணிக்கு பாகிஸ்தான் திரைப்படமான - Ramchand Pakistan
மாலை 6.30 மணிக்கு அவுஸ்திரேலியா திரைப்படமான - Stellie Boy
9ஆம் திகதி பிற்பகல் 3.30மணிக்கு தென்னாபிரிக்க திரைப்படமான - Fanie Fourie's lobola
மாலை 6.30 மணிக்கு நியூஸிலாந்து திரைப்படமான - Whale Rider
10ஆம்திகதி பிற்பகல் 3.30மணிக்கு சிசெல்ஸ் திரைப்படமான - Sechelles
 
Promotional Video
பஹாமா திரைப்படமான -Womanish Ways
மாலை 6.30 மணிக்கு இந்திய திரைப்படமான -Sonar Kella
11ஆம் திகதி பிற்பகல் 3.30மணிக்கு லசத்தோ திரைப்படமான - Discover Lasotho
கென்யா திரைப்படமான- Ni Sisi
மாலை 6.30 மணிக்கு ஐக்கிய ராஜ்ஜியம் திரைப்படமான- Shell
11ஆம் திகதி பிற்பகல் 3.30மணிக்கு தன்ஸானியா திரைப்படமான-Chungu (Pot)
மாலை 6.30 மணிக்கு இலங்கை திரைப்படமான - Samagee Kathawa

No comments:

Post a Comment