Thursday, November 07, 2013
தூத்துக்குடி::இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் இந்தியக் கடல் எல்ல்லையில் நுழைந்து மீன் பிடித்ததற்காக இந்தியக் கடற்படையால் பிடிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரிக்குத் தென்கிழக்கே 60 கடல் மைல் தொலைவில் இந்திய கடலோரக் காவல் படையைச் சேர்ந்த வைபவ் கப்பலில் ரோந்து சென்ற போது, கடற்படையினர் அவர்களைப் பிடித்து வந்து, தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து அவர்களை கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரும் படகுடன் தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இன்று இரவு அல்லது நாளை காலை தூத்துக்குடி வருவார்கள் என தெரிகிறது.
இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கடந்த 2 மாதத்தில் மட்டும் 50 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment