Monday, November 11, 2013
இலங்கை::இலங்கைக்கு எதிராக ஆவணப்படங்களை வெளியிட்ட புலிகளின் ஆதரவு செனல் - 4 வின் ஊடகவியலாளர் கெலம் மெக்கரே மற்றும் அவரது ஊடகக் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவருடைய வருகையை எதிர்த்து கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையின் கொலைக்களங்கள், தண்டிக்கப்படாத போர்க்குற்றம், யுத்த சூனிய வலயம் உள்ளிட்ட இலங்கை தொடர்பான ஆவணப்படங்களை புலிகளின் ஆதரவு கல்லம் மெக்ரே தயாரித்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் கெலும் மெக்கரே மற்றும் அவரது குழுவினருக்கு எதிராக விமான நிலையத்தில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூனின் ஊடகக் குழுவில் மக்கரேவும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவருடைய வருகையை எதிர்த்து கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையின் கொலைக்களங்கள், தண்டிக்கப்படாத போர்க்குற்றம், யுத்த சூனிய வலயம் உள்ளிட்ட இலங்கை தொடர்பான ஆவணப்படங்களை புலிகளின் ஆதரவு கல்லம் மெக்ரே தயாரித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment