Pages

Tuesday, November 12, 2013

புலிகளின் ஆதரவு சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டுநாயக்காவில் ஆர்ப்பாட்டம்!:- 2ம் இணைப்பு!!

Tuesday, November 12, 2013
இலங்கை::புலிகளின் அட்டூழியங்களை புலிகள் செய்த கொலைகளை வெளிப்படுத்த தவறியுள்ள சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களான கெலும் மக்ரே, ஜொனத்தன் மில்லர் உட்பட அந்த நிறுவனத்தின் மூன்று ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டுநாயக்கவில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

கெலும் மக்ரே உட்பட சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகக் குழு நேற்று  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பொழுது விமான நிலையத்திற்கு வெளியில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பும் ஒன்றியம் என்ற அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
 
இலங்கைக்கு எதிராக செயற்பட்ட சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களான ஜொனத்தன் மில்லர், கெலும் மெக்ரே ஆகியோருக்கு இலங்கையில் கால் வைக்க வீசா அனுமதியை வழங்கிய அரசுக்கும், அரச அதிகாரிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக ஒன்றியத்தின் உறுப்பினரான எச்.கே.டி. சந்திரசோம தெரிவித்தார்.
 
சனல் 4 தொலை்ககாட்சியின் இந்த ஊடகவியலாளர்கள் இலங்கையின் செல்வாக்கை இழக்க செய்துள்ளதுடன் புலிகள் செய்த அட்டூழியங்களை சுட்டிக்காட்ட தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்
 
அதேவேளை சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளரும் சர்ச்சைக்குரிய போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனருமான கெலும் மக்ரேவை விமான நிலையத்தில் சூழ்ந்து கொண்ட இலங்கை ஊடகங்கள், அவரது இலங்கைக்கு குற்றம் சுமத்தியதாக ஊடகவியலாளர் ஜொனத்தன் மில்லர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்..
 
புலிகளுக்கு ஆதரவாக, இலங்கைக்கு எதிராக ஆவணப்படம் தயாரித்த ‘செனல்-04’ தொலைக்காட்சியின் கெலம் மக்ரே நேற்று இலங்கையை வந்தடைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
 
பொதுநலவாய அரச தலைவர் மாநாட்டில் செய்தி சேகரிப்பதற்காக மக்ரே நேற்று பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பிரிட்டனின் சனல்-4 தொலைக் காட்சி மற்றும் கெலம் மக்ரேவுக்கு எதிராகவே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதன்போது புலிகளால் கொல்லப் பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்ட தமது உறவினர்களின் புகைப்படங்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், இலங்கை வந்தடைந்த கெலம் மக்ரே மற்றும் ஊடகக் குழுவினர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்புடன் விமான நிலையத்திலிருந்து அனுப்பிவைக்கப் பட்டனர்..
 
தேசிய ஒன்றுமைக்கான இயக்கமே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டகாரர்கள்,  சனல்-4 ஊடகவியலாளர்களின் வருகையை எதிர்க்கும் சுலோகம் தாங்கிய அட்டைகளை தாங்கியிருந்ததுடன் சனல்-4 புலிகளின் அட்டூழியங்களை வெளிப்படுத்த தவறியுள்ளதாகவும் இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

சுனல்-4 ஊடகவியலாளர்களுக்கு விசா வழங்கிய அரசாங்கத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தங்களுடைய கோஷங்களை எழுப்பினர்.

No comments:

Post a Comment