Tuesday, November 12, 2013
சென்னை::கோவை மாவட்டம் ஈச்சனாரியில் ரூ.13 கோடி செலவில் கட்டப்பட் டுள்ள மேம்பாலத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (11.11.2013) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், ஈச்சனாரியில் 13 கோடி ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், தமிழகம் முழுவதும் 189 கோடியே 54 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 மேம்பாலங்கள் மற்றும் பாலங்களையும், 14 கோடி ரூபாய்மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தாராபுரம் புறவழிச்சாலையையும், 2 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
ஒரு மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளில் சாலைக் கட்டமைப்பு வசதி மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. சாலைக் கட்டமைப்பு வசதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தேவைக்கேற்ப மாநிலம் முழுவதிலும் பாலங்களை கட்டுவதிலும், சாலைகள் மற்றும் பாலங்களைப் பராமரிப்பதிலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம், ஈச்சனாரியில் 13 கோடி ரூபாய்மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை எண்.209_ல் ரயில்வே கடவு எண் 150_க்கு மாற்றாக 516.08 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
இந்த மேம்பாலம் திறக்கப்படுவதால் பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் கிணத்துகடவு போன்ற நகரங்களிலிருந்து கோயம்புத்தூர் மாநகருக்கு வந்து செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் உட்பட பொதுமக்களின் போக்குவரத்து எளிதாவதோடு, பயண நேரமும் வெகுவாக குறையும். இந்த மேம்பாலம் கட்டுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு 6 மாதங்கள் முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாவட்டம், நெற்குன்றத்தில் 16 கோடியே 4 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம் காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கத்தில் 29 கோடியே 68 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண்.37_க்கு மாற்றாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்; கிருஷ்ணகிரி மாவட்டம், தாசம்பட்டியில் 10 கோடியே 63 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண்.98_க்கு மாற்றாகக் கட்டப்பட்டுள்ள கீழ்ப்பாலம்; தருமபுரி மாவட்டம், பசுவாபுரத்தில் 57 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் ; விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் 11 கோடியே 70 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் ரயில்வே
கடவு எண்.156_க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ; கோயம்புத்தூர் மாவட்டம், இருகூரில் 21 கோடியே 10 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண்.144_க்கு மாற்றாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ; திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் 28 கோடி ரூபாய்மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண்.279_க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ; திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டத்தில் 4 கோடியே 27 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் அரசலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம் ; திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்லில் 17 கோடியே 65 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண் 5_க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ; மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் 22 கோடி ரூபாய்மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண் 370_க்கு மாற்றாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ;
விருதுநகர் மாவட்டம், துலுக்கன்குறிச்சியில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுபாலம் ; திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் 24 கோடியே 50 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண். 502_க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ; கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாரில் 2 கோடி ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம் என மொத்தம் 202 கோடியே 54 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 மேம்பாலங்கள் மற்றும் பாலங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
மேலும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகரில் 14 கோடி ரூபாய்மதிப்பீட்டில் அலங்கியம் சாலை சந்திப்பு முதல் ஒட்டன்சத்திரம் சாலை வரை, 3.60 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை;
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் 45 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் மாளிகை ; ஈரோடு மாவட்டம், அந்தியூரில் 30 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் மாளிகை ; சத்தியமங்கலத்தில் 18 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடங்கள் ; கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூரில் 30 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்ட தரக்கட்டுப்பாடு அலுவலகக் கட்டடம் திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்லில் 20 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடங்கள் ; நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் 20 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடங்கள் ; புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயிலில் 20 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உட்கோட்டம்
மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடங்கள் ; சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 30 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் மாளிகை ; மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் 22 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடங்கள் இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் 22 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடங்கள் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் 30 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடங்கள் என மொத்தம் 16 கோடியே 87 லட்சம் ரூபாய்மதிப்பீட்டிலான புறவழிச்சாலை மற்றும் கட்டடங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கில் தேசிய நெடுஞ்சாலை எண். 209_ல் கணபதி அருகில் 20 கோடி ரூபாய்மதிப்பீட்டில் 520.47 மீட்டர் நீளத்திற்கு கூடுதல் இருவழி மேம்பாலம் அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை அமைச்சர் எஸ். தாமோதரன், ஏஓநெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் கே. ஜெயராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
No comments:
Post a Comment