Pages

Monday, November 11, 2013

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ஹையான் சூப்பர் புயலால், லெய்டி தீவுப்பகுதியில் மட்டும் 10,000 பேர் பலி!!

Monday, November 11, 2013
தால்கோபான் : பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ஹையான் சூப்பர் புயலால், லெய்டி தீவுப்பகுதியில் மட்டும் 10,000 பேர் பலியாகியுள்ளனர். புயல் சென்ற பாதையில் 600 கி.மீ தூரத்துக்கு  நகரங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உணவுக்காக கடைகளை சூறையாடும் அலவநிலை ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சேதத்தை ஏற்படுத்திய ஹையான் புயலால் இதுவரை 10,000 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானவர்களை காணவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.

கடற்கரையோர நகரங்கள் பல நீரில் முழுவதுமாக மூழ்கியுள்ளன. சாலை ஓரங்களிலும், கட்டிட இடிபாடுகளிலும் சடலங்கள் சிக்கி சிதறிக் கிடக்கும் காட்சி மனதை உலுக்குகிறது.  பிணவாடையை தாங்கமுடியாமல் மக்கள் முகத்தை பொத்திக்கொண்டு நடமாடுகின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் வேகமாக நடைபெறாததால் மக்கள் உணவுக்காக கடைகளை சூறையாடுகின்றனர். மருந்துகள் மற்றும் குடிநீரை தேடி அலைகின்றனர்.

மணிக்கு 313 கிமீ வேகத்தில் தாக்கிய புயலால், மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள லெய்டி தீவின் கட்டிடங்கள் 80 சதவீதம் சேதமடைந்துள்ளது. வளைகுடா பகுதியில் அமைந்துள்ளதால் தாக்லோபான் நகரம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. தாக்லோபான் நகரில் இதுவரை 400 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் நகரம் முழுவதும் 10,000 சடலங்கள் சிதறி கிடக்கின்றன. மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்திருப்பதால், மீட்பு குழுவினர் இடிபாடுகளுடன் சேறும் சகதியுமாக உள்ள கடற்கரையோர பகுதிகளுக்கு செல்ல முடியாமல் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரும் பேரழிவு என்று தாக்லோபான் நகர போலீஸ உயரதிகாரி எல்மர் சோரியா கூறியுள்ளார்.

புயலால் ஏற்பட்ட கனமழையால் அலைகள் 4 மீட்டர் உயரத்திற்கு எழுந்ததாக உயிர் தப்பிய தாக்லோபான் விமானநிலைய அதிகாரி தெரிவித்தார். விமானநிலையம் முழுவதும் சேறும் சகதியும், மரங்களும் இடிபாடுகளும் நிறைந்துள்ளன. பேகோ மற்றும் க்யுயன் நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளது. கடற்கரையோரத்தில் சுமார் 1 கி.மீ பகுதிகள் நீரில் மூழ்கிவிட்டது. மேலும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.  

No comments:

Post a Comment