Pages

Monday, October 28, 2013

ஜயவர்த்தனபுர கோட்டே மாநகரப் பகுதியில் இலவச இணையத்தள (WiFi) சேவை!

Monday, October 28, 2013
இலங்கை::கோட்டே மாநகர சபையும் ஸ்ரீ லங்கா தொலைத் தொடர்பு நிறுவனமும் இணைந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே மாநகரப் பகுதியில் இலவச இணையத்தள (WiFi) சேவையை முதல் முதலாக வழங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை (25) மாலை 4.30 மணிக்கு ராஜகிரிய வெலிக்கட முச்சந்தியில் அமைந்துள்ள பெரகும்பா சமாதான பூங்காவில்  மேற்படி இலவச இணையத்தள சேவையை மக்கள் பாவனைக்காக வழங்கும் நிகழ்வு கோட்டே மாநகர முதல்வர் ஜனக ரணவக்க தலைமையில் இடம்பெற்றது.
 
மேற்படி நிகழ்வில் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரனதுங்க, அமைச்சர் மேர்வின் சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா , முன்னாள் அமைச்சர் றோகித போகொல்லாகம, சமயத் தலைவர்கள், மாநகர சபை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்வில் பிரமுகர்கள் இணையத்தள கருவிகள் பொருத்தப்பட்ட கோபுரத்தில் இணைய சேவையை ஆரம்பித்து வைப்பதையும், நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் மாநகர முதல்வர் ஜனக ரணவக்க உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.
 
இத்திட்டத்திற்காக சுமார் 300 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் இதில் 70 இலட்சத்தை கோட்டே மாநகர சபை வழங்கியுள்ளதாகவும்  மாநகர சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment