Thursday, October 17, 2013
சென்னை::தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பலத்த எதிர்ப்புகளை தொடர்ந்து, இலங்கையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக துணை ஜனாதிபதி அன்சாரி, அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நவம்பர் 10ம் தேதி, இலங்கை கொழும்புவில் காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் புலிகளின் ஆதரவாளர்கள் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பிரதமருக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதி இருந்தார். அதற்கு கடந்த 14ம் தேதி கருணாநிதிக்கு மன்மோகன் சிங் பதில் கடிதம் ஒன்று அனுப்பினார். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மூலம் அனுப்பிய அந்த கடிதத்தில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும். காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து எல்லா முக்கிய விஷயங்களையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இதையடுத்து அந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள மாட்டார். அவருக்கு பதிலாக துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி, அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கேற்ப கடந்த 2011ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் துணை ஜனாதிபதி அன்சாரிதான் பங்கேற்றார். தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளதால், கடந்த முறையை போலவே இந்த முறையும் மாநாட்டில் துணை ஜனாதிபதி பங்கேற்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.

No comments:
Post a Comment