Monday, October 21, 2013
கனடா::இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் அமர்வுகளை புறக்கணிக்கக் கூடாது என கனடா முன்னாள் பிரதமர் பிரயன் மல்ரோனி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையில் அமர்வுகளை புறக்கணிப்பது உசிதமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உறுப்பு நாடுகளின் அரசாங்கங்கள் மக்களை சரியான விதத்தில் நடாத்த வில்லை அல்லது ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்து அமர்வுகளை புறக்கணிக்கத் தொடங்கினால், உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி அடைந்து வரும் பல நாடுகளில் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 53 நாடுகளைக் கொண்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பு வலுவான ஓர் அமைப்பு எனவும், அந்த அமைப்பில் கனடா முக்கிய பங்களிப்பினை வழங்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமர்வுகளில் பங்கேற்காது விமர்சனம் செய்வதனை விடவும், அமர்வுகளில் பங்கேற்று பிழைகளை சுட்டிக்காட்டுவது மிகவும் புத்தி சாதூரியமான தீர்வாக அமையும் என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment