Pages

Thursday, October 10, 2013

இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா அனுப்ப முயன்ற வழக்கில் ஒருவர் கைது!

Thursday, October 10, 2013
கடலூர்::இலங்கை அகதிகளை கள்ளத்தோணி மூலம் ஆஸ்திரேலியா அனுப்ப முயன்ற வழக்கில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் இருந்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் விசைப்படகுகள் மூலமாக ஆஸ்திரேலியா தப்ப முயன்ற இலங்கை அகதிகள் 23 பேர் கடலூர் துறைமுகத்தில் போலீசாரிடம் பிடிபட்டனர்.
 
ஆஸ்திரேலியா அனுப்ப கள்ளத்தோணி ஏற்பாடு செய்த ஏஜென்டுகள் கன்னியாகுமரி, பெருமாள்புரம் முகாம் ரவிச்சந்திரன் (23), புதுச்சேரி மாநிலம், வம்பா கீரப்பாளையம் வேலு (40), ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் "கியூ' பிரிவு போலீசாரிடம் சிக்கினர். கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து, இவ்வழக்கில் தலைமறைவான வீரமணி, சேட்டு ஆகியோரை தேடி வந்தனர்.
 
இந்நிலையில், மதுரையில் பதுங்கியிருந்த மதுரை, ஊத்தங்குடியைச் சேர்ந்த சேட்டு (36) என்பவரை "கியூ' பிரிவு போலீசார் பிடித்து, கடலூர் துறைமுகம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், ட்டுவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

No comments:

Post a Comment