இலங்கை::மனித உரிமையை ஆயுதமாகப் பயன்படுத்தி ஏனைய நாடுகளைக் கட்டுப்படுத்த முயலும் கனடா போன்ற நாடுகள் தமது கடந்த கால வர லாற்றை மறந்து செயற் படுவதாக ஜனாதிபதியின் பேச்சாளரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவருமான கலாநிதி மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு தொடர்பில் கனடாவின் நிலைப்பாடு பற்றி குறிப்பிட்ட அவர்; மனித உரிமை என்பது மிக முக்கிய மானதும் எந்தவொரு மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் உரித்தான ஒன்றாகும். எனினும் இதன் பெயரால் சில நாடு களை கட்டுப்படுத்த முயல்வது தவறு எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
மனித உரிமை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனினும், அதனை வேறு உபாயங்களுக்கான ஆயுதமாக பயன்படுத்துவது தவறு.வரலாற்றில் இதுபோன்று பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பொதுநலவாய நாடுகள் அமைப்பிலுள்ள முக்கிய நாடுகளில் கனடாவும் ஒன்று. ஏனைய நாடுகளின் மனித உரிமை பற்றி பேசும் கனடா 1991, 2003ம் ஆண்டுகளில் ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கும் 2011ல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பதற்கும் அதே ஆண்டில் லிபியா மீதான தாக்குதல் போன்றவற்றிற்கும் உதவியுள்ளது. மக்கள் அருந்தும் குடிநீர் கிணறுகளில் விஷம் கலந்த வரலாற்றைக் கொண்டவர்களே இன்று மனித உரிமை பற்றிப் பேசுகின்றனர்.
இப்போது அந்த நிலை மாற்றமடைந்துள்ளது. எனினும் ஏனைய நாடுகளைக் கட்டுப்படுத்த முனைவது தொடர்கிறது.சிறுபான்மையினரைப் படுகொலை செய்து தமது நாட்டைக் கட்டியெழுப்பியவர்கள் பழையதை மறந்து இப்போது ஏனைய நாடுகளின் மனித உரிமை பற்றி பேசுவதே விந்தையாகவுள்ளது. ஏனைய நாடுகளின் பிரச்சினைகள், வேதனைகளை தமக்கு சாதகமாக்க முயலுவதே இவற்றின் செயற்பாடாகியுள்ளது.

No comments:
Post a Comment