Tuesday, October 29, 2013

இலங்கை காமன்வெல்த் மாநாடு: இந்தியா பங்கேற்க தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி!

Tuesday, October 29, 2013
சென்னை::இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தடைவிதிக்க கோரி மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பேராசிரியர் சரஸ்வதி கோவிந்தராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 
இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. ஆனால் மனுதாரரின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இந்த மனுவை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி என்.சத்திய நாராயணன் ஆகியோர் கடந்த வாரம் விசாரித்தனர்.
இன்று இந்த மனு மீதான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தங்களது தீர்ப்பில் கூறியிருந்தனர்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment