Pages

Tuesday, October 22, 2013

யாழ். கைதடியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வடமாகாண சபைக்கான புதிய கட்டடத்திற்கான கிரகப்பிரவேசம் இன்று இடம்பெற்றுள்ளது!

Tuesday, October 22, 2013
இலங்கை::யாழ். கைதடியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வடமாகாண சபைக்கான புதிய கட்டடத்திற்கான கிரகப்பிரவேசம் இன்று இடம்பெற்றுள்ள
து.
 
சமய அனுஷ்டானங்களுடன் இன்று காலை 7 மணிக்கு இந்த நிகழ்வு  இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
 
இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஷ்வரன், வட மாகாண பிரதம செயலாளர், ஆளுநர் செயலாளர் உட்பட பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
வடமாகாணசபை கட்டடத்திற்கான உத்தியோகப்பூர்வ திறப்பு விழா எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
 
இதேவேளை, வடமாகாண சபையின் கன்னி அமர்வும் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment