Tuesday, October 8, 2013

ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராக பதவிப்பிராமணம் செய்து கொண்ட முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்: அங்கஜன் இராமநாதன்!

Tuesday, October 08, 2013
இலங்கை::வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராக பதவிப்பிராமணம் செய்து கொண்ட முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பளரும், வட மாகாண சபையின் உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் பதவியேற்புத் தெடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராக பதவிப் பிராமணம் செய்து கொண்ட முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த முப்பது ஆண்டுகால யுத்தமும் அதன் முடிவும் மிகவும் கசப்பானவை. அந்த அனுபவங்களிலிருந்து மீண்டும் ஓர் அவல வாழ்வுக்கு இட்டுச்செல்லாத முதற் படியை நீங்கள் எடுத்து வைத்துள்ளீர்கள். இனங்களிற்கிடையிலான ஐக்கியத்தையும் இலங்கை அரசியல் சாசனத்தையும் மதிக்கும் வகையில் அதற்கு ஏற்றவாறு நீங்கள் நடந்து கொண்ட விதம் உங்கள் அரசியல் புலமையை சுட்டி காட்டி நிற்கின்றது.

எம் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு மத்திய அரசோடு ஒத்திசைவான செயற்பாடுகளை முன்னெடுத்து சிறப்பான நம்பிக்கையுடன் கூடிய புரிந்துணர்வை ஏற்படுத்துவதே அவசியம் என்பதை உங்கள் நடவடிக்கை மூலம் காண்பித்து இருப்பது மகிழ்ச்சிக்குரியதே. வட மாகண சபையின் உறுப்பினர் என்ற அடிப்படையில் உங்களினதும் உங்கள் உறுப்பினர்களது மக்கள் நலன் சார் நடவடிக்கை அனைத்திற்கும் எனது மனமுவந்த ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும். இந்த மாகாண சபை மக்கள் நடவடிகைக்கான ஓர் உந்து சக்தியாக செயற்படும் என மக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள். தொடர்ந்தும் மத்திய அரசுடனான புரிந்துணரக்கூடிய உறவை பேணி மக்கள் நலம் வென்ற மாகாணமாக எமது மாகாணத்தை கொண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment