Thursday, October 17, 2013

இலங்கை திரும்பிய அகதிகள் மீண்டும் தமிழகம் வரமுயற்சி : கியூ பிரிவு போலீசார் விசாரணை!

Thursday, October 17, 2013
ராமநாதபுரம்::தமிழகத்தில் அகதிகளாக இருந்து, இலங்கை திரும்பியவர்கள் கடன் மற்றும், தேர்தல் பிரச்னை காரணமாக, மீண்டும் தமிழகத்திற்கு வருகின்றனர். இது குறித்து, "கியூ' பிரிவு போலீசார், விசாரித்து வருகின்றனர்.

இலங்கையில் போர் நடந்தபோது, ஏராளமானவர்கள் அகதிகளாக, தமிழகம் வந்தனர். போர் முடிந்தபின், தமிழக முகாம்களிலிருந்து, பலர் இலங்கைக்கு திரும்பினர். அங்கிருந்து, அகதிகள் வருகை முற்றிலும் நின்றது. இலங்கை செல்ல விரும்பாதவர்கள், அந்தந்த முகாம்களில் தங்கி உள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக, மீண்டும் படகுகள் மூலம் அகதிகள் வரத் துவங்கியுள்ளதால், "கியூ' பிரிவு போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர்.
 
இதில், இலங்கையில் நடந்த தேர்தல் எதிரொலியாக தாக்கப்பட்டதாலும், கடன் பிரச்னையாலும், பலர் மீண்டும் தமிழகத்திற்கு, அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர். "கியூ' பிரிவு அதிகாரி கூறியதாவது:தமிழகத்தில் அகதிகளாக இருந்து, இலங்கை திரும்பியவர்களே, மீண்டும் அகதிகளாக வந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம், இலங்கையில் ஏற்படும் தனிப்பட்ட பிரச்னைகளுக்கு கூட, மீண்டும் அகதியாக இங்கு வந்து விடுகின்றனர். கடந்த சிலநாட்களுக்கு முன், ஒரு பெண் அகதி, கடன் பிரச்னையால் இங்கு வந்துள்ளார். புதிய அகதிகள் யாரும் வரவில்லை, என்றார்.

No comments:

Post a Comment