Monday, October 28, 2013

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: துப்பாக்கி சூட்டில் ராணுவ அதிகாரி பலி!

 Monday, October 28, 2013
ஸ்ரீநகர்::ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினார்கள். உரி பகுதியில் இன்று காலை நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் இந்திய ராணுவத்தின் அதிகாரி (ஜே.சி.3) பலியானார். மற்றொரு அதிகாரிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக பீரங்கிகளை கொண்டு இந்த தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது. சுமார் 30 நிமிடங்கள் சண்டை நடந்தது.

பாகிஸ்தான் அத்துமீறல் தொடர்வதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. ஸ்ரீநகர்–முசாபர்பாத் இடையே பஸ் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை பாகிஸ்தான் 130 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment